375 ஆண்டுகளாக காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு - மர்மமாக வாழ்ந்த 52 லட்சம் மக்கள்
பூமியில் எட்டாவது கண்டம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுவது இது முதல் முறையல்ல...இதற்கு முன்பும் பல முறை உலகின் எட்டாவது கண்டம் குறித்த பேச்சுக்கள் எழுந்ததுண்டு. அப்போதும் கடலுக்கு அடியே மூழ்கி போன எட்டாவது கண்டம் இதோ! என்றுதான் சொல்லப்பட்டது.ஆனால் 375 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பூமியின் எட்டாவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர் அந்த எட்டாவது கண்டத்தின் ஒரு பகுதிதான் கடந்த 1642ம் கண்டுபிடிக்கப்பட்ட நியூசிலாந்து என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அதாவது எட்டாவது கண்டத்தின் 94 சதவீத நிலப்பரப்பு கடலுக்கடியில் மூழ்கி விட்ட நிலையில், மேலே இருக்கும் ஆறு சதவீத நிலப்பரப்பு தான் நாம் காணும் நியூசிலாந்து. மர்மங்கள் நிறைந்த பசிபிக் பெருங்கடலில் சுமார் 3500 அடி ஆழத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒளிந்திருந்த இந்த கண்டத்திற்கு 'ஜிலாண்டியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கண்டம் குறித்த தெளிவான விரிவான வரைபடம் தான் தற்போது புவியியலாளர்களால் வெளியிடப் பட்டுள்ளது.இதற்கு முன்னர் நீருக்கு அடியில் ஒளிந்திருக்கும் நிலப்பரப்பை கண்டறியும் ஸ்கேனிங் முறையான பாத்திமெட்ரிக் கொண்டும்.. பூமியின் அடி பகுதியில் டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் கொண்டும் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கண்டம் கடலில் மூழ்கியுள்ளது என்பதையும்... ஜிலாண்டியாவின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் சதுர கிலோமீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மடகாஸ்கரை விட ஆறு மடங்கு பெரியது இந்த கண்டம்.
தற்போது கடலுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட எட்டாவது கண்டத்தின் பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள், கடலுக்கு அடியில் உள்ள கண்டம் மலைத்தொடர்கள், பிடபூமி உள்ளட்டவை எங்கெங்கு அமைந்துள்ளன என்பது உட்பட தெளிவான வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒரு முறை ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்திய துணை கண்டம் ஆகியவை ஒன்று சேர்ந்து 'கோண்டுவானா' என்று அழைக்கப்பட்ட காலமும் உண்டு. இந்த கண்டம் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து பல கண்டங்களாக தனித்தனியாக நகர்ந்தது என்றும் கூறுவார்கள். அப்படி நகர்ந்ததில் ஒரு கண்டம் தான் இந்த ஜிலாண்டியா என கூறுகிறார்கள், புவியியலாளர்கள்.