குரோஷியாவில் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து - 7 வயது சிறுமி பலி
குரோஷியாவில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்து மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில், மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தலைநகர் சாக்ரெப் அருகே உள்ள பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை சரமாரியாக கத்தியால் தாக்கினார். இதில் ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில், ஏழு வயது சிறுமி பலியானார். இதற்கிடையே, கத்திக்குத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததில், அவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரிய வந்துள்ளது.
Next Story