தொடரும் ரஷ்ய தாக்குதல் - 3 பெண்கள் காயம்
உக்ரைனின் மைக்கோலைவ் Mykolaiv பகுதியில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 3 பெண்கள் காயமடைந்தனர். இரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு கட்டிடத்தில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதனிடையே, உக்ரைனின் கீவ் Kyiv பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள், மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக தெரிவித்துள்ள உக்ரைன் ராணுவம், அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
Next Story