1484 கிலோ எடையுள்ள கருப்பு பெட்டிகளுடன் கடலில் மிதந்த 3 பேர்..
கொலம்பியாவில் இருந்து கடலில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் ஹொக்கைன் போதைப்பொருளை கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளுக்கு ஹொக்கைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கொலம்பிய கடலோர காவல்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது, புயூனேவென்சுரா பகுதியில் கடலில் கருப்பு பெட்டிகள் ஏராளமானவை மிதந்து சென்றன. அவற்றுக்கு இடையே 3 பேர் இருந்துள்ளனர். அவர்களை பிடித்து, பெட்டிகளை கருப்பு பெட்டிகளை சோதனை செய்தபோது, ஆயிரத்து 484 கிலோ எடை கொண்ட ஹொக்கைன் இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு, 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும், இந்திய மதிப்பில் 426 கோடி ரூபாய் மதிப்பு என தெரிய வந்துள்ளது.
Next Story