கதிகலங்க வைக்கும் CHOPPER பைக் ரேஸ்... சீறி பாயும் வின்டேஜ் பைக்குகள்...

x

பைக் ரேஸ்னு சொன்னா... நமக்கு தெரிஞ்சது இந்த MOTOGP ரேஸ் தாங்க... நாம பெரும்பாலும் பைக் ரேஸ்ஸ வீடியோ கேம்லயும்... தூங்கும் போது கனவுலயும் தான் ஓட்டிரிப்போம்... ஆனா இதை தாண்டி பல வினோதமான பைக் ரேஸ் நடந்துட்டு தான் இருக்கு வாங்க அதுலாம் என்னனு தெரிஞ்சுக்கலாம்... இது எப்டி இருக்கு பகுதில...

இந்த பைக் ரேஸ் வரிசைல முதல்ல நாம பாக்க போறது... CHOPPER RACE...

அதாவது நம்ம Ghost Rider படத்துல... மாஸ்ஸா ஒரு பைக் வரும்ல அந்த பைக்க வச்சு தான் இந்த ரேஸ்ஸே நடத்துறாங்க... ஏங்க இந்த பைக் ஏறி உக்கார்றதுக்கே ரெண்டு நாள் ஆகும் இதுல எப்டி ரேஸ் ஓட்டுவாங்கனு உங்கள மாதிரி தான் நானும் டவுட்ல கேட்டேன்... பட் இந்த ரேஸ்ஸ ஓட்டுனம்னா கடுமையான பிராக்டிஸ்க்கு அப்புறம் தான்... கோதா குள்ள இறங்குனுமாம்...

CHOPPER பைக்க கண்டு புடிச்ச அதே அமெரிக்காவுல இந்த மிரட்டலான பைக் RACE ரொம்பவே பேமஸாவும் இருக்கு...

ரேஸ்ஸோட ரூல் என்னனு பாத்தா... எல்லா பைக் ரேஸ்ல இருக்க அதே ரூல் தான்... அப்புறம் என்ன உங்கள்ல யாராச்சும் இந்த பைக் வச்சுருந்தீங்கனா நீங்களும் ரேஸ்ல கலந்துக்கோங்க...

நெக்ஸ்ட்டு நாம பாக்க போறது vintage motorcycle race...

ரேஸ்ஸோட பேருலயே தெரிஞ்சுடுச்சு இது என்ன மாதிரியான ரேஸ்னு... இந்த ரேஸ்ல... பைக் என்ன மாடல்லா இருந்தாலும் எப்டி இருந்தாலும் ஓகே தான்... ஆனா முக்கியமான கன்டிசன்... போட்டில பங்கேற்குற பைக் எல்லாம் 1970-க்கும் முன்னாடி தயார் பண்ண பழைய பைக்கா தான் இருக்கனுமாம்...

சும்மா இல்லைங்க இந்த ரேஸ்க்காகவே பழைய பைக்கலாம் தூசி தட்டி... ஓட்டிட்டி இருக்காங்க...

அடுத்து நாம ஓட்ட போறது Minibike ரேஸ்...

என்னயா இது... பைக் ரேஸ்னு சொல்லிட்டு குட்டி குழந்தைங்க ஓட்டுற சைக்கிள் ரேஸ்ஸ காட்டுறீங்கனு நெனைக்காதீங்க... யாரு மேல சத்தியம் பண்ணி சொல்லுறதுனு தெரில ஆனா சத்தியமா சொல்லுறேன் இதுவும் பைக் ரேஸ் தான் நம்புங்க... அதாவது நார்மலா பாக்குற விசயத்தை... குட்டி குட்டியா மாத்தி காட்டுனவங்க தான் நம்ம ஜப்பான் காரங்க... அதுனால தான் இந்த பைக்கயும் விட்டு வைக்காத இவங்க அதையும் குட்டியா 50 CC பைக்கா ரெடி பண்ணி... ஓட்டிட்டு இருக்காங்க... சரி குட்டி பைக்கா இருக்கே அப்போ குட்டி பசங்க தான் ஓட்டுவாங்களோனு நெனச்சா அது தான் இல்ல... இந்த மினி பைக்கயும் பெரிய பெரிய ரேசர் தான் ஓட்டுறாங்க...

பைக் குட்டியா இருக்குறதுனால இதைலாம் பாக்க கூட்டம் வருமானு பாத்தா... மோட்டோ ஜிபி க்கு... எப்டி கூட்டம் அலை பாயுதோ அதுமாதிரி Minibike க்கும் கூட்டம் குவியுது...

வாவ்... பைக் பாக்க குட்டியா அழகா இருக்கே... ஏங்க எனக்கும் ஒரு ரவுண்டு தாங்கலே ஓட்டிட்டு தரேன்...

மினி பைக் ரேஸ்ஸ பாத்து முடிச்ச நாம அடுத்து பாக்க போறது... Yeh Dosti... Hum Nahi Todenge... ( பாட்டாக படிக்கவும் ) என்ன ரேஸ்னு சொல்லிட்டு ஷோலே படத்துல வர பாட்ட பாடிட்டு இருக்கேனு பாக்குறீங்களா... அட இந்த பாட்டுல தர்மேந்திராவும் அமித்தாப்பச்சனும் ஓட்டிட்டு போற பைக்க வச்சு தான் அடுத்து நாம பாக்க போற Sidecar motocross ரேஸ்....

இந்த Sidecar பைக்க... நிறைய சினிமா படங்கள்ல நாம பாத்து ரசிச்சுருந்தாலும்... பெரும்பாலும் இன்னைக்கு இந்த பைக் பயன்பாட்டுல இல்லனு தான் சொல்லனும்... ஆனா இந்த பைக்க உருவாக்குன பிரிட்டிஸ் காரங்க இன்னும் பழச மறக்காம ஓட்டிட்டு இருக்காங்க.. ஓட்டுறதோட நிறுத்திக்காம... இந்த பைக்க வச்சு Sidecar motocross-ங்குற பேருல நம்மள கதிகளங்க வைக்குற மாதிரி ரேஸ் நடத்துறாங்க...

இத ரெண்டு வகையா பிரிச்சு நடத்துறாங்க... ஒன்னு ரேஸ் டிராக்க்ல... இன்னோனு பள்ள மேடு நிறைஞ்ச ரோட்டுல... நார்மலா பைக்ல போகும் போதே நம்ம ஊரு ரோடு கண்டிசன்கு தூக்கி வாரி போடுது நீங்க எப்டி தான் ஓட்ரீங்களோ...

அடுத்து நாம பாக்க போற ரேஸ் Pit bike ரேஸ்...

மணல் மேடுகள்ல ஓட்டுற இந்த ரேஸ்ஸ் நிறைய பேரு டி.வில பாத்துருக்க வாய்ப்புகள் இருக்கு ஆனா மணல் மேடுகள் ஓட்டுறது மட்டும் இந்த ரேசோட கான்சப்ட் கிடையாதுங்க... சேறு, பாதைல விழுந்து கிடக்குற மரம், சுரங்கம்னு இப்டி பல தடைகள தாண்டி யாரு முதல்ல வராங்களோ அவங்க தான் இந்த ரேஸ்ஸோட வெற்றியாளராம்...

ஹ்ம்ம்ம் நமக்கு எதுக்கு இந்த ரேஸ்லாம் நம்ம வேடிக்க பாக்குறதோட நிறுத்திப்போம்...


பைக் ரேஸ்னா அதுக்குனு ரெடி பண்ணி வச்சுருக்க டிராக்ல தான் ஓட்டனும்... அதை விட்டு நம்ம ஊரு ரோட்டுல ஓட்டுனா என்ன நடக்கும்... ஒன்னு நம்மளே கீழ விழுந்து சில்லரை வாங்குவோம்... இல்லனா போலிஸ் கிட்ட சிக்கி வெளுக்க வெளுக்க அடி வாங்குவோம்... ஆனா அதே ரோட்டுல... மக்கள், போலீஸ்ஸோட ஆதரவுல ஒரு பைக் ரேஸ் நடக்குதுனா அது தான் isle man of tt...

நார்மலான பைக் ரேஸ்ல வர போற டிராக்க முன் கூட்டியே கனிச்சு ஓட்ட முடியும் ஆனா இங்க அதுக்கு சான்ஸ்ஸே இல்ல... ஆனா அதையெல்லாம் பொருட்படுத்தாம ரேஸ் நடத்துராங்க. வேடிக்கை பாக்குற நமக்கு பயத்த குடுக்குது...

ஒரு பைக்க சைடு ஸ்டேண்டு போட்டு நிக்க வைக்கிறதுக்கே நம்ம நாளு பேர ஹெல்ப்புக்கு கூப்பிட வேண்டியதா இருக்கு ஆனா அதே பைக்க கரடு முரடான பாதைல நிக்க வைக்குறாங்கனா அது தாங்க trials bike competition....

இது வரை பாத்த பைக் பந்தயம்லாம்... டிராக்ல தான் நடந்துச்சு ஆனா இந்த போட்டியோட ஸ்பெஷல் என்னனா இன்டோர் குள்ள தான் நடக்கும்... அதாவது இந்த கேம் செங்குத்தான மேடு பள்ளங்கள்ல ஏறி யாரு சீக்கிரமா டாஸ்க்க கம்ப்ளீட் பன்றாங்களோ அவங்க தான் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்...

சில சமயம் இன்டோர் நடக்குற இந்த போட்டி ஆபத்து நிரைஞ்ச அவுட்டோர் கூட நடக்குமாம்

அப்புறம் என்னாங்க நிறைய வினோதமான பைக் ரேச பாத்துட்டோம்... அதுனால இதலாம் பாக்குறதோட நிறுத்திக்கோங்க... ட்ரைலாம் பண்ணி பாக்காதீங்க ஒரு வேலை ட்ரை பண்ணி பாக்கனும்னு ஆசை இருந்தா... ரேஸ் டிராக்ல போய் பண்ணுங்க... எங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க... அன்ட் இதே மாதிரி வேற எதாச்சும் சுவாரஸ்யமான விசயங்கள் எதாச்சும் இருந்தா அதை கமென்ட்ல சொல்லுங்க அதை பத்தி அடுத்த வாரம் அலசுவோம்...


Next Story

மேலும் செய்திகள்