நடுநடுங்க வைத்த விமான விபத்து.. வெளியானது உள்ளே இருந்து பயணிகள் எடுத்த வீடியோ
கனடாவின் ஹாலிஃபேக்ஸ் Halifax விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தில் தீ பற்றிய நிலையில், அதில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். ஹாலிஃபேக்ஸ் விமானநிலையத்தில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் பழுதானதாக தெரிகிறது. இதனால், இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, விமானத்தல் திடீரென தீ பற்றியது. உடனடியாக விமானத்தில் பற்றிய தீயை அணைத்த அதிகாரிகள், சுமார் 80 பயணிகளை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Next Story