மக்கள் கண்முன்னே சிதறிய விமானம்.. உடல் சிதைந்து பலியான 10 பேர் - கோரத்தை காட்டும் காட்சி
தெற்கு பிரேசிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில், 10 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, விபத்தில் சிக்கியது. இதில் விமானி உள்பட பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியதில், அப்பகுதிகளில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள், விபத்தின் கோரத்தை காட்டுகின்றன.
Next Story