மாறி மாறி கிண்டல் செய்துகொண்ட பைடன்-ட்ரம்ப் - இணையத்தில் வைரல்

x

இருவரும் அதிபர் தேர்தலில் களம் காணும் நிலையில், CNN நடத்தும் முதல் விவாதம் ஜூன் 27 அன்றும், ABC நடத்தும் 2வது விவாதம் செப்டம்பர் 10 அன்றும் நடைபெறவுள்ளது. ட்ரம்ப் தன்னிடம் 2020ல் 2 விவாதங்களில் தோற்றதாகவும், இப்போது விவாதம் செய்ய விரும்புவது போல் காட்டிக் கொள்வதாகவும் பைடன் கிண்டல் செய்ய... அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் பைடன் எனவும், தான் எதிர்கொண்டதிலேயே மோசமான விவாதம் பைடனுடையது தான் எனவும் வசைபாடிய ட்ரம்ப், பைடனால் 2 வாக்கியங்களை சேர்த்துக் கூட பேச முடியாது என பதிலுக்குக் கிண்டல் செய்தார். தற்போதே இருவரும் மாறி மாறி வசைபாடி வரும் நிலையில் எதிர்வரும் விவாதத்திற்காக அமெரிக்க மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்