மீண்டும் வெடித்த வன்முறை... முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு... பற்றியெரியும் வங்கதேசம்
வங்கதேச தலைநகர் டாக்காவில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடம் மற்றும் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவியது. வங்கதேசத்தைவிட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி சுமார் 6 மாதங்கள் ஆகி உள்ளது. வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படாது என இடைக்கால அரசு கூறியுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, இடைக்கால அரசுக்கு எதிராக அவாமி லீக் கட்சியினர் போராடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவாமி லீக்கிற்கு தடை விதிக்கக்கோரியும், டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.
Next Story