அசைக்க முடியாத இஸ்லாமிய அரசியல் தலைவர் படுகொலை.. பொறுப்பேற்ற நாடே நடுங்கிய கூலிப்படை

x
  • மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, கொலையாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன...
  • தசரா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அரங்கேறிய ஒரு அரசியல் கொலை மும்பையை உலுக்கிப் போட்டது.
  • மகாராஷ்டிர அரசியலில் முக்கிய புள்ளியாக வலம் வந்த பாபா சித்திக், சனிக்கிழமை இரவு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது மகனின் அலுவலகம் அருகே, முகமூடி அணிந்த மர்ம நபர்களால் சுடப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
  • 1976ல் காங்கிரஸ் வாயிலாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய பாபா சித்திக், அக்கட்சியின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவராக திகழ்ந்தவர்.
  • அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார்.
  • இந்த நிலையில் தான், மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
  • மும்பையில் பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கும் இந்த கொலையால் நெருக்கடி ஏற்பட, கொலையாளிகளை கண்டறிய குற்றப்பிரிவு போலீசார்கள் அடங்கிய 15 குழுக்களை களமிறக்கி விட்டிருக்கிறது, மகராஷ்ட்டிரா அரசு.
  • கொலைச் சம்பவம் அரங்கேறிய பகுதியில் கைதாகிய இருவரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
  • லாரன்ஸ் பிஷ்னோயி குழு, இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றிருப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
  • இதற்கிடையே, பாபா சித்திக்கின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்தது.
  • அவரது இல்லத்தில் இருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது, அஜித் பவார் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  • கொட்டும் மழையிலும் பாபா சித்திக்கின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்