அதிபரான பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்

x

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் அழைப்பின்பேரில் இப்பயணத்தை மேற்கொள்கிறார். வரும் 17-ம் தேதி வரை இந்தியாவில் தங்கியிருந்து, உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அதிபராக பதவியேற்றபின் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும், முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதன்படி, இந்திய வருகையின்போது குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்தியா - இலங்கை இடையே முதலீட்டு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்விலும் அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்