உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான்... ரியல் எஸ்டேட்டை ஆட்டிப்படைக்கும் டிரம்ப் டவர்ஸ்?

x

அமெரிக்க அதிபராக ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் டிரம்ப், இந்திய ரியல் எஸ்டேட் பிசினஸ்-ல் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாக கூறப்படும் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வர, இந்தியா ரியல் எஸ்டேட் பிசினஸ்-ல் ட்ரம்ப் நிறுவனத்தின் ஆதிக்கம் படர்ந்து வருவதாக பரவலான கருத்து நிலவி வருகிறது...

இந்தியாவின் ரியல் எஸ்டேட் நெட்வர்க்கில் டிரம்பா ? என புருவமுயர்த்தும் பலரையும் வாய்பிளக்க வைக்கிறது டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் கட்டப்படும் வானுயர ஆடம்பர கட்டடங்கள்...

ஆனால் டிரம்ப் எனப் பெயரிடப்பட்ட இந்த கட்டிடங்கள் டிரம்புக்கு சொந்தமானது என நினைத்து விட வேண்டாம்.

ஆம்... டிரம்ப் டவர் தொடர்பானகட்டிட பணிகளை நிர்வகிப்பது டொனால்ட் டிரம்ப் அல்ல. அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்...

உலகம் முழுவதும் பிரபல கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் டிரம்ப் ஜூனியர் ரியல் எஸ்டேட் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர்..

அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிக்கட்டி பறக்கும் அவர், அமெரிக்கவுக்கு வெளியில் நேரடியாக கட்டுமானம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது கிடையாது.

ஆனால் தனது நிறுவனம் மற்றும் டிரம்ப் பெயரை பயன்படுத்திக் கொள்ள மற்ற நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அதன் மூலம் கட்டப்படும் கட்டிடங்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்று வருகிறார்..

அந்த வகையில், இந்தியாவில் டிரம்ப் பெயரில் கட்டிடங்களை கட்டிக் கொள்ள பிரத்யேக உரிமையை ட்ரிபேகா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது...

ட்ரிபேகா நிறுவனத்தின் உரிமையாளரான கல்பேஷ் மேத்தா இந்தியாவில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ட்ரம்ப் பெயரில் கட்டடங்கள் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது டிரம்ப் டவர்ஸ்..

முதன் முதலில் 2014ம் ஆண்டு பிரபல கட்டுமான நிறுவனமான லோதா நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் தனது கட்டுமானப் பணியை தொடங்கிய ஜூனியர் டிரம்ப், 79 மாடிகளுடன் கூடிய ஆடம்பர கட்டடத்தை 2018ல் முடித்தார்...

இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் வரை கொடுத்து குடியிருப்புகளை வாங்கியுள்ளனர்.

இதுத் தவிர..புனே, குர்கான், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் வானுயர கட்டடங்களை அமைத்தார்...

இந்த கட்டிடங்களில் நீச்சல் குளம், ஜிம், பிட்னஸ் சென்டர், சர்வதேச தரத்தில் ஸ்பா, கிரிக்கெட் மைதானம், போன்ற எண்ணிலடங்கா ஆடம்பர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே போன்று டிரம்ப் பெயரில் பல கட்டிடங்களை கட்டி வருகிறது ட்ரிபேகா நிறுவனம்..

மும்பையிலேயே 2வது ட்ரம்ப் டவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நொய்டா, ஹைதராபாத், பெங்களூர் பகுதிகளிலும் டிரம்ப் டவர்ஸ் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்..

இதனால் அமெரிக்காவை கடந்து வெளிநாடுகளில், அதிக டிரம்ப் டவர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என கருதப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்