டிரம்ப் பதவியேற்பு எதிரொலி - ஒன்று சேரும் ரஷ்யா - சீனா | Trump | Putin | Xi Jinping | America
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா - சீனா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு செய்யப்பட்ட உலகளாவிய வளர்ச்சியை ஆதரிக்க இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ள புதின், சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்ய இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
Next Story