புதினை கடுமையாக எச்சரித்த டிரம்ப்
நேட்டோவில் இணையும் உக்ரைன் முடிவால் கோபமடைந்த ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தினார். 3 ஆண்டுகளாக போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இதுகுறித்து பேசிய டிரம்ப், ஜெலென்ஸ்கி மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும், ரஷ்ய ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது என்பது வீண் தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெலென்ஸ்கி போரைத் தவிர்க்க ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என்றும், அதைத் தன்னால் எளிதாக செய்திருக்க முடியும் எனவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மிகப்பெரிய வரிகளையும் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story