அலையில் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்த படகு.. உயிருக்கு போராடி தத்தளித்த 20 பேர் - குலைநடுங்க விடும் ட்ரோன் வீடியோ

x

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விழும் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது. சான் டியாகோ கடற்கரை பகுதியில் வந்த படகு ஒன்று, கலிபோர்னியாவுக்குள் நுழைய முயன்றது. அப்போது, திடீரென அலையில் சிக்கி தலைக்குப்புற படகு கவிழ்ந்த‌து. படகில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்து த‌த்தளித்தனர். அவர்களை, கடற்கரை பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல் என கூறப்பட்ட நிலையில், அவர்கள் சட்டவிரோதமாக குடிபெயர்வதற்காக வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்