ஏர்போர்ட்டை பஸ்பமாக்கிய இஸ்ரேல்.. பேரதிர்ச்சி காட்சிகள்
ஏர்போர்ட்டை பஸ்பமாக்கிய இஸ்ரேல்.. பேரதிர்ச்சி காட்சிகள்
ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹவுதி ஊடகமான அல் மசிரா என ஹவுதி இயக்கத்துடன் தொடர்புடைய பல பகுதிகளை இஸ்ரேல் தாக்கியது... இத்தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... அத்துடன் ஏமனின் மேற்குக் கடற்கரையில் உள்ள ஹொடைடா, சலிஃப் மற்றும் ராஸ் கனாதிப் துறைமுகங்களிலும் ராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. மேலும் ஹெசியாஸ் மற்றும் ராஸ் கனாதிப் மின் உற்பத்தி நிலையங்களும் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்காகின.
Next Story