பசிக்கு ஒரு பிடி உணவுக்கூட இல்லை-அழிவின் விளிம்பில் மொத்த நாடும்...உலகையே ஷாக்காக வைத்த ஒரு முடிவு

x

வறட்சிக்கு மத்தியில் இறைச்சிக்காக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைக் கொல்ல ஆப்பிரிக்க நாடான நமீபியா திட்டமிட்டுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

தென்னாப்பிரிக்க நாடுகளுள் ஒன்றுதான் இந்த நமீபியா...

நாட்டின் மொத்த மக்கள் தொகையோ இருபத்தைந்தரை லட்சம்... அதில் பாதிக்குப் பாதி பட்டினியால் வாடும் அளவு வரலாறு காணாத வறட்சி...வறட்சியின் விளைவாக நாட்டின் 84 சதவீத உணவு இருப்புகள் தீர்ந்துவிட்டன...

மழை பொய்த்து விட்டது...வேளாண் பயிர்கள் கருகி விட்டன...உணவுக்குக் கால்நடைகளையும் கொன்றாகி விட்டது...இனி உணவுக்கே வழியில்லை எனும் சூழலில் தான் அந்நாட்டு அரசு வனவிலங்குகளை உணவாக்கும் திட்டத்தை நாடியுள்ளது...

83 யானைகள்...300 வரிக்குதிரைகள்.... 30 நீர்யானைகள்... 50 இம்பாலா மான்கள்... 60 எருமைகள், 100 நீலக்காட்டு மான்கள்... மற்றும் 100 எலாண்ட் மான்கள் உணவுக்காக வேட்டையாடப்படவுள்ளன...

இறைச்சிக்காக என்பது ஒரு காரணம் என்றாலும்... மனித விலங்கு மோதலைக் குறைப்பதற்காகவும் விலங்குகள் கொல்லப்படவுள்ளன...

எதற்காக மோதல்?...எல்லாம் தண்ணீருக்கும்...உணவுக்காகவும் தான்...

உணவு - தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர நேரிடும்போது மோதல்கள் நிகழ வாய்ப்புண்டு...

ஜிம்பாப்வே, மலாவி, Zambia ஆகிய நாடுகளுடன் நமீபியாவும் வறட்சியால் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது...

வறட்சியால் ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் சந்திக்கப் போகின்றனவோ என்பதை நினைக்கையிலேயே நெஞ்சம் பதைபதைக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்