51 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்-புள்ளிகள் இல்லாமல் பிறந்த ஒட்டகச் சிவிங்கி..

x

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில், ஒட்டகச்சிவிங்கி ஒன்று, அபூர்வமாக குட்டியை ஈன்றுள்ளது. ஜான்சன் நகரத்தில் உள்ள பிரைட் உயிரியியல் பூங்காவில் இந்த அபூர்வ ஒட்டகச்சிவிங்கி குட்டி பிறந்துள்ளது. பொதுவாக ஒட்டகச் சிவிங்கியின் உடலில், பெரிய அளவிலான புள்ளிகள் காணப்படும். ஆனால், தற்போது பிறந்துள்ள ஒட்டக சிவிங்கியின் உடலில் புள்ளிகள் ஏதும் இல்லாமல் முழுவதும் பிரெளன் நிறத்திலேயே உள்ளது. இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதே போன்ற ஒட்டகச் சிவிங்கி, கடந்த 1972ம் ஆண்டு ஜப்பானில் உயிரியியல் பூங்காவில் பிறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிக்கு, 'தனித்துவமான' என்ற பொருளில் Kipekee என்றும் அசாதாரணமானது என்ற பொருளில் Firayali என்ற பெயரும் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, அதன் மூலம் ஒட்டக சிவிங்கி குட்டிக்கு பெயர் சூட்டப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்