இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 8 இந்தியர்கள்? “மரண தண்டனை“ கொந்தளித்த கத்தார் -இந்தியாவுக்கு பெரும் சவால்?

x
  • கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது தகவலாக இருக்கிறது.
  • 8 பேருக்கும் உதவ அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும், கத்தார் அதிகாரிகளுடன் பேசுவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
  • இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை உறவினர்கள் மத்தியில் நிலவுகிறது.
  • இந்த சூழலில் கத்தார் சிறையில் இருக்கும் 8 பேரது உறவினர்களையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
  • 8 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
  • இதற்காக தோஹாவில் இருக்கும் இந்திய தூதரகம், கத்தார் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் உடன் தொடர்ந்து ஆலோசிக்கிறது.
  • இந்த நிலையில் 8 பேரையும் மீட்க இந்திய அரசிடம் இருக்கும் வாய்ப்புகள் என்ன..? என்று கேட்டால்.. சட்டரீதியான நடவடிக்கையோடு வலுவான நட்புறவு வாயிலாக அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம் என சொல்கிறார்கள் வல்லுநர்கள்..
  • இந்தியா - கத்தாருடன் மிகவும் வலுவான வர்த்தக மற்றும் பாதுகாப்பு நட்புறவை கொண்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்