ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 51 உடல்கள் - நைஜீரியாவில் நடந்த கோர சம்பவம்
வடக்கு நைஜீரியா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். பாஸ்சா (Bassa ) பகுதியில் உள்ள ஜிக்கே (Zikke ) மற்றும் கிமாக்பா (Kimakpa ) ஆகிய 2 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சாலையில் ஆங்காங்கே கிடந்த சடலங்களை மீட்ட உறவினர்கள், ஒரே இடத்தில் பெரிய குழி தோண்டி அனைவரது உடல்களையும் புதைத்தனர். இஸ்லாமிய மேய்ப்பாளர்கள்- கிறிஸ்தவ விவசாயிகள் இடையே நீடிக்கும் மத மோதலால், இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
Next Story