"இனி எங்க போவோம்.. உயிரைத் தவிர எல்லாம் போச்சு..." வாழ்வை சூறையாடிய `மிக்ஜாம்' - கண்ணீரில் மக்கள்

x

மிக் ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த ஏழை மக்கள்...

தரமணி, கல்லுக்குட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்... இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள்.... தூய்மைப் பணியாளர்கள்... தினம் தினம் வேலைக்கு சென்றால் மட்டுமே உணவு... ஆனால், மிக் ஜாம் புயல் இவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது... வெள்ள பாதிப்பு தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையெல்லாம் மொத்தமாய் சூறையாடிச் சென்று விட்டதாய்த் தெரிவிக்கின்றனர் கல்லுக்குட்டை வாசிகள்... குருவி சேர்ப்பது போல் சிறுகச் சிறுக சேர்த்தவை எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 10 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டது இவர்களின் வாழ்க்கை... உணவு, உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின்றி இவர்கள் பரிதவித்து வருகின்றனர்... உடல் நிலை சரியில்லாத கணவரை வைத்துக் கொண்டு ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கும் குருவம்மாள்... வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பிள்ளைகளின் வீடுகளுக்கு அலைந்து கொண்டிருக்கும் அம்மணி... இருக்கும் உடைமைகளையாவது காப்பாற்றிக் கொள்ள வெள்ள பாதிப்பிலும் வீட்டை விட்டு வெளியேறாத வள்ளி என்று கல்லுக்குட்டையில் சொல்லப்படாத கதைகள் ஏராளம்... வறுமையை மட்டுமே வைத்திருக்கும் இவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசாவது உதவ வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்