நிஜத்தில் ஒரு நீர்ப்பறவை - மனதை உருக்கும் பெண்ணின் சோக பின்னணி
நீர்ப்பறவை என்றொரு திரைப்படம்...இலங்கைக் கடற்படையால் கடலில் குண்டடி பட்டு இறந்த காதல் கணவன் தன்னைத் தேடி எப்படியும் வருவான் என்ற நம்பிக்கையில் கதாநாயகி 25 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருப்பது தான் கதை...இப்படித் திரையில் மட்டும் அல்ல....நிஜத்திலும் இது போன்ற காவியக் காதல் சாத்தியமே என்பதை காட்டியிருக்கிறது, காரைக்காலைச் சேர்ந்த இந்தப் பெண்மணியின் வாழ்க்கை..செண்பகம் வள்ளி...1993ல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவியைக் கரம் பிடிக்கையில், இவருக்கு வெறும் பதினெட்டே வயது தான்...அதற்கடுத்த ஆண்டே செண்பகத்தின் தந்தையும் கணவனும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்...மகிழ்ச்சியோடு செண்பகமும் வழியனுப்பி வைத்துள்ளார்...சென்றவர்கள் சென்றது தான்... பல நாட்கள் ஆகியும் கரை திரும்பவில்லை... இலங்கைக் கடற்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் இரையானதாக தகவல்தான் வந்தது.நிறைமாத கர்ப்பிணியான செண்பகவள்ளி நிற்கதியாய் விடப்பட்டார்... எவ்வளவோ போராடியும் இருவரின் உடல்கள் கூட கரை சேர்க்கப்படவில்லை...இனி வேறு வழியும் இல்லை... தந்தை முகம் பாராமலே பிறந்த தனது மகன் சக்திவேலுக்காக இனி வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, 28 ஆண்டுகளுக்கு முன்பு தையல் எந்திரத்தை மிதிக்கத் துவங்கினார்...தற்போது வரை அந்தத் தையல் எந்திரம் தான் செண்பகவள்ளியின் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறது...