சிறந்த முதலீட்டு ஊக்குவிப்புக்காக, தமிழ்நாட்டிற்கு ஐக்கிய நாடுகளின் விருது
சிறந்த முதலீட்டு ஊக்குவிப்புக்காக, தமிழ்நாட்டிற்கு ஐக்கிய நாடுகளின் விருது வழங்கப்பட்டுள்ளது. 8-வது உலக முதலீட்டாளர்கள் மன்ற மாநாடு, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் வழிகாட்டு நிறுவனத்திற்கு, முதலீடு ஊக்குவிப்புக்கான ஐக்கிய நாடுகளின் விருது வழங்கப்பட்டது. ஆற்றல் மாற்றலை ஊக்குவிக்க, பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்டு வரும் புதுமையான முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு கிடைத்த இந்த விருது, ஐக்கிய நாடுகளின் அங்கீகாரமாக கருதப்படுகிறது.
Next Story