சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் அமோகம் - மனமுருகி தரிசித்த பக்தர்கள்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் அமோகமாக நடைபெற்றது... 20அடி உயரத்தில் பனை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்து நம்பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளிய பின்னர், கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனை எனும் பெருந்தீப விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்