காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று, அதிக பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்குமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திர பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கனும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று, சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்பரோ கிரிஜிகோவா முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி...

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரியை கன்னத்தில் அறைந்த விவகாரம்...

தமிழ்நாட்டிற்கு தினந்தோறும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை அளித்த விவகாரம்...

நெல்லை ரயில்வே ஜங்ஷன் வந்த ரயிலின் எஞ்சின் முன் சிதைந்த நிலையில் சிக்கியிருந்த உடல் மீட்பு...

புதுக்கோட்டை அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் உறவினர்கள் சாலைமறியல்....


Next Story

மேலும் செய்திகள்