மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, அடக்கப் பாயும் காளையர்கள்...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி...
ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடி மிரட்டிய காளைகள்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளை அசத்தல் வெற்றி...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க, ஆர்வமுடன் வந்த அயர்லாந்தை சேர்ந்த 53 வயதான கான்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூரில் களைகட்டிய எருது விடும் விழா...
இந்தியாவின் விண்வெளி திறன்களை உயர்த்திக் காட்டியதாக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து...
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் பாராட்டு...
இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் ஷண்முக ரத்னம் மற்றும் அவரது மனைவிக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை...