இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பணியாளர் நலன், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை ஆகியவை, மீண்டும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்

தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று, இந்திய தேர்தல்

ஆணையம் அறிவித்துள்ளது. இதனா விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பாஸ்கரன்...

தமிழ்நாட்டில் 2 மாத கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் விதவிதமான ஏற்பாடுகளை செய்து, குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.. செய்தியாளர்கள் சங்கரன், சதாசிவம், பவித்ரகுமார், பிரதீப்குமார் வழங்கிய தகவல்கள் இவை...

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய அரசியல் நகர்வுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்