வானிலை மையம் சொன்னபடியே கொட்டிய பேய் மழை - குளுகுளுவென மாறிய தமிழகம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவில் கனமழை பெய்துள்ளது
தமிழ்நாட்டில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில்...
திருப்பூர் மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஆண்டிபாளையம், மங்கலம், கல்லாங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிளான, ஓவேலி, தேவாலா, நாடுகாணி, பந்தலூர் ஆகிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்
கரூர் மாவட்டம் அரவக்கறிச்சி பகுதியில் தடா கோவில், பள்ளபட்டி, ஷா நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெய்யில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக நகரம் குளிர்ச்சி அடைந்துள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.