குழந்தையோடு வேலை தேடி தவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்... நம்ப வைத்து அழைத்து சென்று செய்த மோசம்
#namakkal | #baby
குழந்தையோடு வேலை தேடி தவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்... நம்ப வைத்து அழைத்து சென்று செய்த மோசம்
நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், அமுதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், மணிகண்டனின் மனைவி, குழந்தை நிகில் கேசவனுடன் சேலம் மாவட்டத்திற்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அப்போது அமுதா என்பவர் அறிமுகமாகி, வேலை வாங்கித் தருவதாக கூறி இந்திராணி என்பவரை அறிமுகம் செய்துள்ளார். மூவருமாக உடுமலை சென்ற நிலையில் முக்கோணம் என்ற பகுதியில் மணிகண்டனின் மனைவி இயற்கை உபாதைக்காக சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி இந்திராணி குழந்தையை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தொடர் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் வைத்து இந்திராணியை கைது செய்தனர். மேலும், இந்திராணியிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.