மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த லாரி ஓட்டுநர்கள்

x

மத்திய அரசு சமீபத்தில் குற்றம் தொடர்பாக புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது. அதில், பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தின் கீழ், லாரி அல்லது டிரக் ஓட்டுநர், ஒருவர் மீது மோதிவிட்டு தப்பி ஓடினால், 10 ஆண்டு சிறையுடன், 7 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் முற்றிலும் தவறானது மற்றும் இதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்கு போராட்டம் தொடரும் என கூறப்படுவதால், பெட்ரோல் பம்பிற்கு எரிபொருள் செல்ல முடியாது என செய்தி பரவியது. இதையடுத்து, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் குவிந்தனர். மத்தியப்பிரதேசம் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்