கோவையின் அடுத்த மேயர் யார்...? வெளியான புதிய அப்டேட்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு கோவை மேயர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கு பகுதியில் முக்கிய மாவட்டமான கோவையில், 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக மேயரை நியமிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. அதன்படி நல்ல அனுபவம் கொண்டவரை சீனியரை மேயராக தேர்வு செய்ய திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக இருக்கும் இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக இருக்கும் தெய்வானை , மாநகராட்சி கல்வி குழு தலைவராக இருக்கும் மாலதி, கோவை மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. வருகிற 8 ஆம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கல்பனா ராஜினாமாவை ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் மேயர் தேர்தலை அறிவிக்கும், ஒரு மாத காலத்திற்கு கோவையின் புதிய பெண் மேயர் யார்...? என்பதும் தெரியவரும்.