`காட்டுக்குள் வங்கி'கொள்ளை அடிப்பதற்கு அளவு எடுத்து செஞ்ச Spot-497கஸ்டமர்களின் ரூ.15கோடிக்கு விபூதி
வரங்கள் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 கிலோதங்க ஆபரணங்கள் கொள்ளை .
தெலுங்கானா மாநிலம் வரங்கள் அருகே இருக்கும் ராயப்பர்த்தியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை உள்ளது. அந்த வங்கிக் கிளையில் மூன்று லாக்கர்கள் உள்ளன.
நேற்று முன் தினம் இரவு கேஸ் கட்டர் மூலம் வங்கியின் ஜன்னலை வெட்டி உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அபாய மணி, சி சி கேமரா ஆகியவற்றின் இணைப்புகளை முதலில் துண்டித்தனர்.
அதன்பின் ஒரு லாக்கரை கேஸ் கட்டரால் வெட்டி திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 500 வாடிக்கையாளர்களின் ஆபரணங்களில் 497 வாடிக்கையாளர்களுடைய ஆபரணங்களை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.
தப்பி செல்லும்போது சி சி கேமரா ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் மறக்காமல் கழற்றி எடுத்து சென்று விட்டனர்.
கொள்ளை போன ஆபரணங்களின் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்றும் அவற்றின் எடை சுமார் 19 கிலோ என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த வங்கியில் இரவு காவலராக ஒருவர் பணியாற்றி வந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்ற பின் வேறு காவலரை வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை.
இரவு நேரத்தில் வங்கியில் காவலர்கள் இல்லாததை கவனித்த கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.