வலியால் துடித்த கர்ப்பிணி மனைவி... அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் - பொங்கியெழுந்த காவலர்

x

பிரசவ வலியால் துடிதுடித்த தனது மனைவிக்கு உரிய கிசிச்சை அளிக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவலர் புகார் அளித்துள்ளார். திருவேங்கடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரபாகரன் பிரசவ வலியால் துடித்த தனது மனைவி பிளஸ்ஸி சர்மிளாவை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்திய நிலையில், பிளஸ்ஸி சர்மிளாவை ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அலட்சியத்துடன் செயல்பட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்