யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ பார்த்து ரூ.1.5 கோடியா? - மிரளவிடும் பின்னணி

x

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ பார்த்து ரூ.1.5 கோடியா? - மிரளவிடும் பின்னணி

ஒன்றரை கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி செய்த வழக்கில், கம்போடியாவில் இருந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் 4 பேரை, இந்தியா வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Youtube ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்த்து, ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமாந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்து இருந்தார். அதன்பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், இந்தியாவில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் க்ரைம் கும்பல் கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்து பணியாற்றுவதை கண்டறிந்தனர். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் நூதனமாக நாடகம் ஆடி, முகமது இஸ்மாயில், அபுதாஹிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரையும் இந்தியா வரவழைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்