Cowtheft | பசுமாட்டை வண்டியில் ஏற்றி திருட முயற்சி - கம்பத்தில் கட்டி வைத்து துவைத்த கிராம மக்கள்
காரைக்குடியில் பசுமாட்டை திருட முயற்சித்த இளைஞர்கள் சிறைபிடிப்பு
காரைக்குடி அருகே பசு மாட்டை திருட முயற்சித்த இளைஞர்களை பிடித்து, பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாகாத்தான் பகுதியில் பசுமாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள், பசுமாட்டை, வாகனத்தில் ஏற்றி திருட முயற்சித்துள்ளனர். இதை கண்ட கிராமத்தினர், இளைஞர்களை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட மூவரும் புதுக்கோட்டையை சேர்ந்த லோகேஸ்வரன், முகர்ஜி, மற்றும் அரவிந்த் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
