டாக்டரிடம் தகராறு செய்த இளைஞர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்
சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், 26ம் தேதி அன்று இரவு முகத்தில் காயத்துடன் வந்த நோயாளி ஒருவர், விரைந்து சிகிச்சை அளிக்குமாறு அங்கிருந்த மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களுடன் சத்தமாக தகராறு செய்து அவதூறாக பேசியுள்ளார். அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்த முயன்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமார் என்பவரை கைது செய்தனர். இவர் பேசின்பாலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 7 குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story