இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்

x

திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், இருனாப்பட்டு பகுதியை சேர்ந்தர்கள் சீனிவாசன், சிலம்பரசி தம்பதி. சீனிவாசனுக்கு அவரது தம்பி மனைவியுடன் தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சீனிவாசனின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்ட சிலம்பரசி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிய காலதாமதம் செய்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், திருப்பத்தூர் சாலையில் சுமார் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்