திருச்செந்தூர் முருகன் கோயிலில் இளம்பெண் ஆடிய ஆட்டம் - அதிர்ச்சியில் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாலை கிராமத்தை சேர்ந்த சுபிக்ஷா, திருச்செந்தூர் கோவிலின் கடற்கரை, கிரிபிரகாரம் உள்ளிட்ட இடங்களில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், பக்தர்களுக்கு இடையூறு அளித்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
Next Story