பணம் மாயமான விரக்தியில் தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடியில், வீட்டில் இருந்து திருடுபோன 22 லட்ச ரூபாய் பணம் கிடைக்காத விரக்தியில் விவசாய கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாரியப்பன் என்பவர், தனது வீட்டில் வைத்து இருந்த, 22 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பல்வேறு கோணங்களில் விசாரித்த போலீசார், மாரியப்பனிடம் 22 லட்சம் எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டனர் . பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த மாரியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Next Story