குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண் - அதிர்ச்சி

குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண் - அதிர்ச்சி
x

கம்பம்மெட்டு காலனி சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் ஹிமா ஆகியோருக்கு 7 வருடத்திற்கு முன்பாக திருமணமாகியுள்ளது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அப்போது, கணவர் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உத்தம்பாளையம் காவல் நிலையத்தில் ஹிமா புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்ற ஹீமா, சேர்ந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளதால், வீட்டுக்குள் வரக்கூடாது என்று கணவர் வீட்டார் கூறியுள்ளனர். இதனால், மறைத்து வைத்திருந்த எண்ணெய்யை குழந்தைகள் மீது ஊற்றி, தன் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் தடுத்து, மேலே தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.Woman tries to set herself on fire with children - Shocking


Next Story

மேலும் செய்திகள்