வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு"15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை.." வரும் 5ம் தேதி..
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வின்ஸ்டார் இந்தியா நிறுவனம் நடத்தி சுமார் ரூபாய் 200 கோடி மோசடி நடந்திருந்தது.இதுகுறித்து சேலம் அழகாபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.பின்னர் வின்ஸ்டார் இந்தியா நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.
இந்த வழக்கில் வின்ஸ்டார் சிவகுமார் உள்பட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.வின்ஸ்டார் சிவக்குமார் வாங்கி குவித்து இருந்த நிலங்களை விற்பனை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில்1686 பேர் புகார் கொடுத்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை நகல் தயாரித்துள்ளனர்.30 பேருக்கும் ஜெராக்ஸ் உள்பட ஒரு ஆளுக்கு 50 ஆயிரம் பக்கம் நகல் கொடுக்க வேண்டும், இதற்கு ரூபாய் 13 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஜெராக்ஸ் எடுக்க டெண்டர் விடப்பட்டது.தற்போது குற்ற பத்திரிக்கை நகல் தயாராகிவிட்டது .இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பீட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வருகிற ஐந்தாம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை இன்று கோவை கொண்டு சென்று டான் பிட் நீதிமன்றத்தில் வழங்கினர்.