வாட்ஸ்அப் குரூப்பில் வந்த மெசேஜ்.. படித்ததும் பறிபோன ரூ.17 லட்சம்.. கதறும் இளைஞர்

x

குமரி மாவட்டம் வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த 26 வயது பட்டதாரி இளைஞர், முகநூலில் பங்குச்சந்தை விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க் மூலம் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துள்ளார். ஆன்லைனில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை குழுவில் இருந்தவர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய இளைஞர் பல்வேறு தவணைகளாக மொத்தமாக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

நாட்கள் கடந்த நிலையில் எந்த கமிஷனும் வராததால், ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது, Geojit என்ற நிறுவனத்தின் பெயரில் போலியாக Link உருவாக்கி ஒரு குழு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அந்த குழு நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். 5பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்