“ஒத்த விளம்பரம்..1 கோடி போச்சு“ WhatsAppஇல் இனிமே எச்சரிக்கையா இருங்க..
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகபணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி 96.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2024-ல் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வந்த விளம்பரத்தை நம்பி ரூபாய்.96.5 லட்சத்தை முதலீடு செய்து இழந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story