Whastapp-ல் வந்த இன்ஜெக்க்ஷன் பெயர்..வாயில் நுரை தள்ளி பறிபோன உயிர்

x

மருத்துவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய இன்ஷக்சன் பெயரை பார்த்து செவிலியர் செலுத்திய ஊசியால், டாஸ்மாக் விற்பனையாளர் பலியான வழக்கில், அவருடைய குடும்பத்துக்கு ரூபாய் 59 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் ரமேஷ் என்பவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் டாக்டர் சண்முகம் என்பவருடைய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அந்த மருத்துவர் வெளியே இருந்ததால், வாட்ஸ் அப் மூலம் கூறிய ஊசியை செவிலியர் ராஜஸ்ரீ செலுத்தி உள்ளார். சிறிது நேரத்தில் ரமேஷ் வாயில் நுரை தள்ளி பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி நதியா போலீசில் புகார் அளித்ததுடன், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ சேவையில் அலட்சியமாக இருந்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சேர்ந்து இறந்த ரமேசின் குடும்பத்துக்கு ரூபாய் 59 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்