சொந்த பணத்தில் ஆசிரியை செய்த செயல்.. குவியும் பாராட்டு மழை
சொந்தப் பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் வாங்கித் தந்து குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் புதிய அரசு தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு, கல்வியோடு சேமிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்தித் தரும் விதமாக ஆசிரியை அன்புச்செல்வி அஞ்சல் நிலையத்தில் உள்ள சிறு சேமிப்புத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்தார்... முதல் கட்டமாக 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியருக்கு அன்புச் செல்வி அன்புடன் தன் சொந்த செலவில் உண்டியல் வாங்கித் தந்து தினந்தோறும் சிறுக சிறுக பணம் சேமிக்க அறிவுறுத்தினார்... அதன்படி கடந்த மாதம் முழுவதும் பிள்ளைகள் தங்களால் இயன்றளவு 500 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை சேமித்துள்ளனர்... சேமிப்பதில் தேனீக்களையே மிஞ்சிய மாணவர்கள் தபால் நிலையத்தில் வரிசையாக நின்று பணத்தை செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.