2024ல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ஹிட் அடித்த பாடல்கள் என்னென்ன?
என்னதான் தமிழ் பாடலாக இருந்தாலும், இந்த ஆண்டு மலையாளப் படங்கள் மூலம் பிரபலமானது இந்த பாடல்கள்...
எதிர்பாராத வகையில் தந்தை மகள் சென்டிமென்டுக்கு புது பாடலை கொடுத்துள்ளது மகாராஜா திரைப்படம்...
சிறுசு முதல் பெருசு வரை கூலாக கேட்டு ரசிக்க வைத்தது ப்ரதர் படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி பாடல்...மற்றும் கோல்டன் ஸ்பேரோ பாடல்..
இதே போல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல்...
இந்த எனர்ஜி மாறாமல், புஷ்பா படத்திலும் கிஸ்ஸிக் பாடலில் நடனமாடி டிரெண்டாக்கியிருப்பார் நடிகை ஸ்ரீலீலா...
நீண்ட நாள் கழித்து அமரன் படம் மூலம் ஸ்லோ மெலடி பாடலை கொடுத்து கிறங்கடித்து விட்டார் ஜிவி பிரகாஷ்...
இந்த காதல் மெலடி லிஸ்டில் டாப்பில் இடம்பிடித்துள்ளது அனிருத்-ன் தீமா பாடல்...
இதே போல் பலரையும் முணுக்க முணுக்க வைத்தது சில்லாஞ்சிறுக்கியே பாடல்...
இந்த வரிசையில், ராயன் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் மற்றும் உசுரே நீதானே பாடலும் ஹிட் அடித்தது...
இப்படி கலர்ஃபுல் பாடல்களை கொண்ட திரையுலகில், வலியையும், வேதனையையும், நம்பிக்கையையும், ஒருங்கே சேர்த்து பெரியோனே ரகுமானே பாடலை இசையமைத்திருப்பார் ஏ ஆர் ரகுமான்...
இதே போல் வலியையும் வேதனையையும் உணர்த்திய வாழை படத்தில், தென்கிழக்கு தேன்சிட்டு பாடல் தேனாய் பாய்ந்தது...