களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..! - ஈரோட்டில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

x

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடி 18 ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி 18ல் பவானி கூடுதுறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காலை 5 மணி முதல் காவிரியில் பணிந்து நீராடி வருகின்றனர்..திருமணமாகாத இளம் பெண்கள் காவிரியில் புனித நீராடி மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது...புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை காவிரியில் விட்டு புதிய தாலி மாற்றுவதும் வழக்கம்..


Next Story

மேலும் செய்திகள்