மே மாதத்தில் மாறிய மேகம்.. உடனே குளிர்ந்த தேனி மக்களின் இதயம்.. அடித்து கொளுத்தி எடுக்கும் அடைமழை

x

தேனி மாவட்டத்தில் வைகை ஆறு உற்பத்தியாகும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வருசநாடு மயிலாடும்பாறை கடமலைக்குண்டு உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மழை நீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தவிர இந்த மலையின் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக மானாவரி பயிர்களுக்கு இது உகந்த மழை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்