அடுத்த 4 நாட்கள்... வெளியே செல்வோர் உஷார்... வெளியான அலர்ட்

x

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்