“இது நமக்கு எச்சரிக்கை..“ - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி ரெக்வஸ்ட்

x

வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையில் பேசிய ராகுல் காந்தி... இது நமக்கு எச்சரிக்கை என மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். முண்டக்காயில் கிராமம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும். வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவு அதிகரிப்பு எச்சரிக்கையளிக்கிறது. சமீப ஆண்டுகளாக நமது நாட்டில் இது போன்று பல்வேறு இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நடைபெற்று வருவது நமக்கு எச்சரிக்கை அளிக்கிறது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு வரைபடம் உருவாக்க வேண்டும், சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதியில் அதிகரித்து வரும் இயற்கைப் பேரிடர்களை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்